நம்மிடையே பேசியவர், “இப்போது மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் ‘பீட்சா 4’ படத்திற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். ‘பீட்சா 3’ திரைப்படம் வெளியான ஒரு ஆறு மாதத்திலேயே ‘பீட்சா 4’ திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்க ஆரம்பித்துவிட்டோம்.
ஆனால், அதற்கான ஸ்கிரிப்ட் அப்போது சரியாக அமையவில்லை. பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு புதிய ஐடியா கிடைத்தது. அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் திரைக்கதையாக மாற்றினேன். அது முழுமையானதாகத் தெரிந்ததும், படமாகச் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.
நான்தான் ‘பீட்சா’ படத்தின் கதாசிரியர். என்னுடைய கதைகள் வழக்கமான சயின்ஸ் பிக்ஷன் ஜானர் படமாகத்தான் இருக்கும். ஆனால், ஹாரர் கதைகள் என்பது எனக்குப் புதியது. அதனால், இதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு எழுதினேன். அதே நேரத்தில், இந்தப் படம் காமன் ஆடியன்ஸுக்கான ஒரு ஹாரர் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
அதே போல், பழிவாங்கும் பேய், பிளாஷ்பேக், அந்தப் பேய் வீட்டுக்குள்ளே போய் உட்கார்ந்துகொள்வது போன்ற வழக்கமான பேய் படங்களுக்கான ஃபார்முலாக்கள் எதுவும் இதில் இருக்காது. ஒரு முற்றிலும் புதிய முயற்சியாக இருக்க வேண்டும் என்று யோசித்து எழுதினேன்.
நான் திட்டமிட்டபடி திரைக்கதையும் நிறைவாக உருவாகியிருக்கிறது. ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ திரைப்படத்தில் என்னுடைய அசோசியேட்டாகப் பணியாற்றிய பிரசாந்த்சந்தர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.” என்றவர், ‘பீட்சா’ பிரான்ச்சைஸுக்கு இருக்கும் மார்க்கெட் குறித்து, ” ‘பீட்சா’ படங்களுக்கான மார்க்கெட் எப்போதுமே பெரியதாக இருக்கிறது.