புதுச்சேரி: `குற்றத்துக்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்’… தலைவிரித்தாடும் `கொலை’ கலாசாரம்!

Spread the love

குற்றத்திற்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு. அய்யப்பன், “பொறுப்பற்றவர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருப்பதுதான் அனைத்திற்கும் காரணம். காவல் நிலையங்களிலும் குற்றப் பிரிவு காவலர்கள், குற்றவாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தாலே பாதி குற்றங்கள் குறையும். குற்றங்களைத் தடுப்பதற்கான எந்த முன்னெடுப்புகளையும் இந்த அரசு மேற்கொள்வதில்லை. அதனால் பலர் ஊரை காலி செய்து கொண்டு செல்கிறார்கள்” என்றார் காட்டமாக.

லோகு அய்யப்பன்

லோகு அய்யப்பன்

காவல்துறை தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, “குற்றவாளிகளுக்கு சட்டங்களின் மீது பயமில்லாமல் போனதுதான் குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணம். போலீஸால் கைது செய்து சிறைக்கு மட்டும்தான் அனுப்ப முடியும். பல ரௌடிகள் குற்றம் செய்வதற்கு முன்பே சட்ட ஆலோசனைகளைப் பெறுகிறார்கள். அதனால்தான் கொலையே செய்தாலும் மூன்றே மாதங்களில் வெளியில் வந்துவிடுகிறார்கள்” என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

புதுச்சேரி மக்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களின் இடப்பெயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்குமா மத்திய உள்துறை அமைச்சகம்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *