அதேபோல விபத்து அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், தீவிர சிகிச்சை, மறுவாழ்வு மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
மேலும் சுமார் ரூ.550 கோடி மதிப்பீட்டில் உருவாகவுள்ள உறுப்பு மாற்று சிகிச்சை மையம், உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை மற்றும் மேம்பட்ட மாற்று மருத்துவ அறிவியலுக்கான முழுமையான பிராந்திய மையமாக செயல்படும். இறுதிக்கட்ட உறுப்புச் செயலிழப்பால் பாதிக்கப்படும் பல நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைதான் நிரந்தரத் தீர்வாக உள்ளது.
அந்த சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், பலருக்கு அது கிடைப்பதில் சவால்கள் இருக்கின்றன. அதை சரிசெய்யும் வகையில், உயர்தர மற்றும் விலை குறைவான மாற்று சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்த மையங்கள் வடிவமைக்கப்பட இருக்கின்றன.

400 படுக்கைகள் கொண்ட இம்மையத்தில், சிறப்பு மாற்று சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், உயர் சார்பு சிகிச்சைப் பிரிவுகள், மேம்பட்ட நோயறிதல் வசதிகள் மற்றும் 14 அறுவை சிகிச்சை அரங்குகள் இடம்பெறும்.
சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், எலும்பு மஜ்ஜை மற்றும் திசு மாற்று சிகிச்சைகளுக்கான தனிப்பிரிவுகளும் அமைக்கப்படும். இந்த மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கிய பின்னர், ஆண்டுதோறும் சுமார் 2,500 முதல் 2,700 உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு மையங்களும் இணைந்து சுமார் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், நிர்வாக மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.