வொர்க்அவுட் செய்பவர்களுக்கு இது பரிந்துரைக்கப்பட சில காரணங்கள் உண்டு. புரோட்டீன் டிரிங்க்ஸ் தசைகளை மீட்டெடுக்க (Muscle recovery) உதவுகிறது. வொர்க்அவுட் செய்பவர்கள் அல்லது உடலமைப்பை மேம்படுத்தும் இலக்கு (Body goals) கொண்டிருப்பவர்களுக்குப் புரோட்டீன் இன்னும் அதிகமாகத் தேவைப்படும்.
சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் வொர்க்அவுட் செய்கிறீர்களோ இல்லையோ, உங்களால் அன்றாட உணவின் மூலம் தேவையான புரோட்டீனைச் சாப்பிட முடியாத பட்சத்தில், புரோட்டீன் டிரிங்க் சாப்பிடுவது நல்லதுதான். அதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை.

ஆனால், நீங்கள் எந்த வகையான புரோட்டீனைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை நீங்கள்தான் மதிப்பிடவேண்டும். அதாவது, அது எந்த மாதிரியான குவாலிட்டி புரோட்டீன்… வே புரோட்டீனா (Whey protein) அல்லது பட்டாணியிலிருந்து பெறப்படும் புரோட்டீனா (Pea protein), உங்களது உடலுக்கு எது செட் ஆகிறது, எது உங்களது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைப் பார்த்து நீங்கள் வாங்கலாம்.
எனவே, புரோட்டீன் எடுத்துக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதை எடுப்பதற்கு முன் உங்கள் உடலைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மருத்துவப் பரிசோதனைகள் (Medical check-up) செய்து, உங்களுக்கு அலர்ஜி (Allergies) எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, எந்த பிராண்ட் உங்களுக்கு செட் ஆகிறது என்று பார்த்து நீங்கள் தாராளமாக புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.