விளாத்திகுளம்: அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்காத விவகாரம்; அதிகாரிகள் விசாரணை!

Spread the love

நாளுக்கு நாள் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காலை உணவு சாப்பிட வரும் மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை. பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகள், பள்ளிக்கு வராமல் இருப்பதற்காக அடம் பிடிப்பது வழக்கம். அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வருவதிலும் தாமதம் ஏற்படும். காலை 8.50 மணிக்குள் காலை உணவு வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை துறை சார்ந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், காலதாமதமாக வரும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க முடியாத நிலை உள்ளது, என தெரியவந்தது. இதற்கிடையே, பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு கிடைக்காத தகவல் வெளியே பரவியது.

விளாத்திக்குளம்

விளாத்திக்குளம்

இதையடுத்து மாவட்ட அலுவலர் (பொறுப்பு) செல்வி தலைமையிலான அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதே போல், முதல்வரின் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளரான ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இரு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் தங்களது விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பின்னர் நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *