நாம் இன்று பெட்ரோல் பங்குகளில் வாங்கும் எரிபொருளானது, கிட்டத்தட்ட 6 வாரங்கள் அல்லது 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே சர்வதேச சந்தையிலிருந்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெயாகும்.
அன்றைய தேதியில் கச்சா எண்ணெயின் விலை, காப்பீட்டுத் தொகை, கப்பல் போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகமாக இருந்தன.
அதன்பிறகுதான் சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி மற்றும் டீலர்களுக்கான கமிஷன் ஆகியவை இதில் சேர்க்கப்படுகின்றன.
எனவே, சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்திருந்தாலும், இந்த மலிவான விலையிலான எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்”.