வெப்ப அலை.. வறட்சி அபாயம்.. அதிகாரப்பூர்வமாக உருவான எல் நினோ! – Kumudam

Spread the love

எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் ஒரு பருவநிலை நிகழ்வாகும். இந்த ஆண்டு அந்தப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸுக்கும் மேல் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ வலுப்பெறுவதன் தாக்கமாக உலகின் பல பகுதிகளில் தீவிர வெப்ப அலைகள், நீடித்த வறட்சி மற்றும் சில பகுதிகளில் கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இந்திய துணைக்கண்டத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழைப்பொழிவு பதிவாகும் சாத்தியமும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக விவசாய உற்பத்தி, குடிநீர் மேலாண்மை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இது ஜூலை முதல் செப்டம்பர் 2026 காலகட்டத்தில் வலுவான எல் நினோவாக மாறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *