குக்கு வித் கோமாளி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை அங்கிருந்த புகழ், வினோத், மாகாபா ஆனந்த் ஆகியோர் தாக்கியதாக வாட்டர்மெலன் திவாகர் போலீசில் புகார் தர, அந்தப் புகார் தொடர்பாக புகழ், வினோத், ஆனந்த் ஆகியோரை விசாரணை செய்திருக்கிறது போலீஸ்.
‘என் மீது புகழ், ஆனந்த் உள்ளிட்டவர்களுக்குப் பொறாமை. எனக்கு விஜய் டிவி தொடர்ந்து வாய்ப்பு தர்றது இவங்களுக்குப் பிடிக்கலை. அதனால என்னைக் கண்டாலே எரிச்சலடையறாங்க. வினோத்துக்கும் எனக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலயே பிரச்னை. அந்தப் பகையை மனசுல வச்சு அவரும் இவங்களோட சேர்ந்துகிட்டார்.
’குக்கு வித் கோமாளி’க்கு சேனல்தான் என்னைக் கூப்பிட்டது. அங்கபோனதும் இவங்க என்னைக் கலாய்க்கறது கேலி செய்யறதுன்னு பண்ணினாங்க.
நானும் பதிலுக்குப் பேசினேன்.
வாக்குவாதம் போயிட்டிருந்தபோதே ஆனந்த் பக்கத்துல இருந்த ஒரு கம்பியை எடுத்துட்டு வந்து என் காலில் தாக்கினார். ரத்தமெல்லாம்கூட வந்துச்சு. அதனாலதான் போலீசுக்குப் போனேன்’ என்பதுதான் திவாகரின் புகார்.
இந்தப் புகார் கொடுக்கப்பட்ட அடுத்தநாளே புகழ், வினோத் ஆகியோர் போலீசார் முன் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தைத் தந்து விட்டனர். ஆனந்த் வெளியூரில் இருந்ததால் அன்று விசாரணைக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி தன் தரப்பு பதிலை தந்தார் ஆனந்த்.
காவல் நிலையத்தில் ஆஜராகிவிட்டு வந்த மாகாபா ஆனந்திடம் பேசினோம்.