பெரம்பலூரில் விதைக்கப்பட்ட ‘ஆர்வம்’ – அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உலகம் | “Aarvam” — A Learning Revolution for Government School Children in Perambalur

Spread the love

15,000 சதுர அடியில் ஒரு மினி இஸ்ரோ!

இங்குள்ள லேபிற்குள் நுழைந்தால் ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன:

• வின் டனல் (Wind tunnel): பெரும் காற்று வீசும்போது வாழை இலை ஏன் கிழிகிறது, தென்னை மரம் ஏன் வளைந்து நிமிர்கிறது, கார் டிசைன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பிள்ளைகள் இங்கே சின்னச் சின்ன எக்யூப்மென்ட்ஸ் மூலம் செய்து பார்க்கிறார்கள்.

• ஒளியின் மாயாஜாலம்: வெவ்வேறு வண்ண விளக்குகளுக்குக் கீழே இலைகளை வைத்து, போட்டோசிந்தசிஸ் (Photosynthesis) எப்படி நடக்கிறது என்று லைவ்-ஆகப் பார்க்கிறார்கள்.

• அகழ்வாராய்ச்சி முதல் ஓலை கைவினை வரை: அறிவியல் (STEM) மட்டுமல்ல, கூடவே மனிதநேயம் (Humanities), தொல்லியல், இசை எனப் பன்முகக் கற்றல் இங்கே சாத்தியமாகிறது.

அசத்தும் ‘ரெசிடென்ஷியல் கேம்ப்’

கடந்த கல்வி ஆண்டில் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தின் 14 அரசுப் பள்ளிகளில் இருந்து 850 பிள்ளைகளை இவர்களே பஸ் அனுப்பி, மதிய உணவும் கொடுத்து, லேபிற்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

“படிக்கிறப்ப மட்டும் கூட்டிட்டு வந்தா ஒரு பாண்டிங் வராது சார். அதான் இந்த மூணு நாள் ரெசிடென்ஷியல் கேம்ப். 100 பிள்ளைகள் இங்கேயே தங்கி, ராத்திரி 9 மணிக்கு டெலஸ்கோப் மூலமா ‘நைட் ஸ்கை வாட்சிங்’ பண்ணி, வானியலோட பிரமாண்டத்தை ரசிச்சாங்க!” என்கிறார் செந்தில் உற்சாகமாக.

தற்போது மே 28 முதல் மே 30 வரை நடைபெற்ற 3 நாள் ‘ரெசிடென்ஷியல் கேம்ப்’ (Residential Camp) மூலம் 100 குழந்தைகள் தங்கி, விண்வெளி அறிவியல் முதல் கிச்சன் கெமிஸ்ட்ரி வரை ஆழமாகக் கற்றுள்ளனர்.

மகாராஷ்டிராவில் பணிபுரியும் திவ்யா IFS அவர்கள் இந்த முகாமில் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தியுள்ளார். (குறிப்பு: கடந்த ஆகஸ்ட் 2025-ல் இஸ்ரோ ஆதித்யா-L1 மிஷன் டைரக்டர் நிகர் ஷாஜி அவர்களால் இம்மையம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது).

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *