பெரம்பலூர்: மது விற்பனை செய்த த.வெ.க பிரமுகர்; கட்சியில் இருந்து நீக்கிய மாவட்ட நிர்வாகம்TVK: Perambalur tvk leader sold alcohol; expelled from party by district administration

Spread the love

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர் தனிப்படை போலீஸாரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீஸார் பாடாலூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட, பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் உமேஷ் (வயது: 36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய த.வெ.க பிரமுகர் ஆவார்.

இதனால், போலீஸாரின் விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை த.வெ.க மாவட்ட தலைமை அலுவலகம், உமேஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருநது அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

மதுபாட்டில்கள் விற்பனை செய்த த.வெ.க பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *