பெற்ற மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் பிறந்த குழந்தை – தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் | Villupuram POCSO Court sentenced father to life imprisonment for sexually assaulting daughter

Spread the love

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான கந்தன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார்.

அதையடுத்து தன்னுடைய 14 வயது மகளை மிரட்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் கந்தன்.

அதனால் 2025-ல் அந்தச் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து அந்தச் சிறுமி, “என்னுடைய அம்மா இறந்தபிறகு அப்பா தினமும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்கிறார்.

யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். அவரால் எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னாலும், மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்கிறார்” என்று கடந்த 09.02.2025 அன்று செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போக்சோ வழக்கு

போக்சோ வழக்கு

அதையடுத்து கந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார், குழந்தையை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் குழந்தையின் தந்தை கந்தன்தான் என்பது உறுதியானது. இந்த வழக்கின் அரசு தரப்பு சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டுவிட்டதால், நேற்று விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “கந்தன் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவர் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுடன் ரூ.7,000 அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார் நீதிபதி வினோதா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *