பேட்டி எடுத்த தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை; பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு| Sexual Harassment Case Registered Against Pandian Stores’ Ravichandran

Spread the love

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்திருப்பவர் ரவிச்சந்திரன்.

சீரியல்கள் தாண்டி “சண்டியர்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபகாலமாக பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவாகத் தீவிரமாகப் பேசி வருகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுக்க பிரசாரமும் செய்தார்.

ரவிச்சந்திரன்

ரவிச்சந்திரன்

நடிகர் கமல்ஹாசன் சனாதனம் குறித்து பேசியபோது அவரைக் கடுமையாக விமர்சித்து பேசியது போலீஸ் புகார் வரை சென்றது நினைவிருக்கலாம். இவர் சில தினங்களுக்கு முன் யூடியூப் சேனல் ஒன்றுக்காகப் பேட்டி அளிக்கிறார்.

அந்தப் பேட்டி முடிந்த அடுத்த சில தினங்களில் இவர் மீது பேட்டி எடுத்த அந்தப் பெண் தொகுப்பாளரே போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

ஆபாசமாகத் தன்னிடம் பேசி அநாகரீகமாக நடந்து கொண்டதாகத்தான் புகார். அந்தப் புகாரின் கீழ் சென்னை அசோக் நகர் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்பொழுது இவர் முன்ஜாமீன் பெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *