பொள்ளாச்சி தொகுதியில் `திடீர் ட்விஸ்ட்' – லீட் எடுக்கும் கொ.ம.தே.க; ஜெயராமன் பின்னடைவு!

Spread the love

பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியனில் கொ.ம.தே.க. நித்தியானந்தம், அ.தி.மு.க-வில் பொள்ளாச்சி ஜெயராமன், த.வெ.க-வில் ராமநாதன், நா.த.க-வில் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் 14 சுற்றுகளில் அ.தி.மு.க வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொ.ம.தே.க. வேட்பாளர் நித்தியானந்தம் 15-வது சுற்றில் 232 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். நித்தியானந்தம் 46,890 வாக்குகளும், பொள்ளாச்சி ஜெயராமன் 46,658 வாக்குகளும் பெற்றுள்ளனர். இன்னும் 6 சுற்றுகளின் முடிவுகள் வர வேண்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

பொள்ளாச்சி ஜெயராமன்

இதேபோல மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் முதல் 13 சுற்றுகளில் முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக 14 வது சுற்றில் த.வெ.க. வேட்பாளர் சுனில் ஆனந்த் 52 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் இந்த தொகுதியிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *