போதைக்கு அடிமையாகி சிறையில் இருந்த மகன்; ஜாமீனில் கொண்டு வந்த தாயைக் கொன்ற கொடூரம்!/Mother murder arrested son

Spread the love

சில மாதங்களுக்கு முன் இண்டூர் பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு ரீல்ஸ் எடுத்த தேவராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில நாட்களுக்கு முன்புதான் தாய் சின்னப்பாப்பாவும், அண்ணன் சித்துராஜும், தேவராஜை ஜாமீன் எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

கடந்த 29 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சின்னப்பாப்பாவிடம் தேவராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வெறி பிடித்ததுபோல் ஆன தேவராஜ், வீட்டில் இருந்த இரும்பு ராடால் சின்னப்பாப்பா தலையில் பலமாக தாக்க அலறியபடி ரத்த வெள்ளத்தோடு விழுந்து இறந்தார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வர, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. இது குறித்து இண்டூர் போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க, போலீசார் வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது கையில் ராடுடன் நின்றிருந்த தேவராஜை கைது செய்தனர்.

பின்னர் சின்னப்பாப்பாவின் உடல் உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்ற வழக்கினால் சிறைக்கு சென்ற மகனை, பெற்ற பாசத்தினால் செலவு செய்து ஜாமீனில் வீட்டுக்கு அழைத்து வந்த தாயை, மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கஞ்சா போதையில் இக்கொலையை தேவராஜ் செய்ததாக ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில், அதை மறுத்து போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், “குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ், தன்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்ற ஆத்திரத்தில் தன் தாயை கொலை செய்துள்ளார். கஞ்சா போதையில் கொலை செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ…

சின்னப்பாப்பாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவு துவாரத்தின் வழியாக பார்த்தபோது, சின்னப்பாப்பா சடலமாக கிடக்க, அருகில் சட்டை அணியாமல் கையில் ரத்தக்கறையுடன் இரும்பு ராடை வைத்தபடி தேவராஜ் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது அந்த துவாரத்தின் வழியாக தேவராஜ் ராடுடன் நிற்பதை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *