த.வெ.க நிர்வாகிகள் பலரும் அமைச்சரை சந்தித்து சால்வை போத்தி மரியாதை செய்தனர். இதில் எம்.எல்.ஏ விஜய் சரவணன், மாவட்ட செயலர் ஏனாதி மதன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது, போதை மாத்திரை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷோபன் ஹரிஷ், மதனுடன் வந்ததாக சொல்லப்படுகிறது. ஏனாதி மதன் அமைச்சரை அறிமுகப்படுத்தி வைக்க ஷோபன் ஹரிஷ், அமைச்சர் அருண்ராஜ்க்கு சால்வை போத்தி மரியாதை செய்தார்.
இதையடுத்து ஷோபன் ஹரிஷ் அமைச்சருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த, போட்டோ சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போதை மாத்திரை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தவெக-வின் மாவட்டச் செயலாளருடன் சேர்ந்து அமைச்சரை சந்தித்ததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ஷோபன் ஹரிஷ் தவெக-வில் இருப்பதாகவும், கடத்தலில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிந்தே மதன் அவரை கட்சியில் சேர்த்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.