‘தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை…’ |DMK Backs Delimitation, Says Tamil Nadu Won’t Be Affected

Spread the love

இதுகுறித்து திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் நடந்தது. காலை 10:10 மணிக்கு தொடங்கி 40 நிமிடங்கள் நடந்த கூட்டத்தின் முடிவில் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்கும் முடிவை திமுக எடுத்திருக்கிறது.

இதுசம்பந்தமாக பேசிய ஆ.ராசா, “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதா சம்பந்தமாக என்ன முடிவென தலைவர் அறிவித்தார்.

எல்லா மாநிலங்களுக்கும் 50% உயர்வை அளிக்கும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். எங்களின் முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல. நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது எடுத்த தீர்மானங்கள் அடிப்படையிலும், இப்போதைய அரசு தாக்கல் செய்திருக்கும் தீர்மானங்களின் அடிப்படையிலும்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

தமிழகத்தின் 7.12% பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

1974 தொகுதி மறுவரையின் போது தமிழகம் 2 தொகுதிகளை இழந்தது. இப்போது அப்படி எந்த இழப்பும் இல்லை. நமக்கு 7.12% பிரதிநிதித்துவம் கிடைக்கிறது.

தமிழ்நாட்டுக்கும் தேசத்துக்கும் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், மொழி சிறுபான்மையினர்கள் பாதிக்கப்படும்படி பாஜக எதாவது செய்தால் சிறுபான்மையினர்களின் நண்பனாக நாங்கள் அதை எதிர்ப்போம்.

Fair Delimitation என காங்கிரஸூக்கே திமுகதான் வழிகாட்டியது’ எனப் பேசியிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *