மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்: கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் முழு விவரம்|

Spread the love

பரிந்துரைக்கப்படும் இயற்கை உணவுகள்

கேழ்வரகு கூழ், முருங்கைக்கீரை சூப், முருங்கை ஈர்க்கு சூப், முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை, பீட்ரூட், பொன்னாங்கண்ணி, பசலை உள்ளிட்ட கீரை வகைகள், நீர்த்து காய்ச்சிய பசும்பால், ரசம், மாதுளம்பழம், அத்திப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. பழங்களை ஜூஸாக அல்லாமல் முழுப் பழமாகவே சாப்பிடுவது சிறந்தது என வலியுறுத்தப்படுகிறது.

ஏன் இந்தத் திட்டம் முக்கியம்?

கர்ப்ப காலத்தில் தாயின் ஊட்டச்சத்து குறைபாடு குழந்தையின் வளர்ச்சியையும், பிறக்கும் எடையையும் பாதிக்கலாம். குறைந்த எடையுடன் பிறப்பு, இரும்புச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற அபாயங்களைத் தடுக்க சத்தான உணவு மற்றும் அரசு வழங்கும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு, போதிய ஓய்வு, மனஅழுத்தமில்லாத சூழல், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்ற உதவும் குடும்ப ஆதரவு ஆகியவை மிகவும் அவசியம். கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தாய் மற்றும் குழந்தையின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த திட்டமாகவே “மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்” பார்க்கப்படுகிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *