முதல்வர் விஜய் போட்டோவை உள்ளாட்சி அலுவலகங்களில் வைப்பதில் கடும் அக்கப்போர் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது அல்லவா… அந்த வகையில், சென்னை அருகே முருகக்கடவுள் கோவில் அமைந்துள்ள நகராட்சி ஒன்றில், முதல்வர் விஜய்யின் போட்டோவை வைக்க நகராட்சித் தலைவியின் கணவரே நடவடிக்கை எடுத்துவிட்டாராம். தி.மு.க-வைச் சேர்ந்தவரான அவர், சொந்தக் கட்சி கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி, முதல்வரின் ஃபோட்டோவை நகராட்சி அலுவலகத்தில் வைத்தாராம்.
அப்போது, அங்கு ஏற்கெனவே மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படத்தை அவரே அகற்றி, குப்பை தொட்டியில் வீசி விட்டாராம். ‘கட்சி மாறணும்னு முடிவு பண்ணிட்டாரு. அதுக்காக, பனையூருக்கு தன் விசுவாசத்தைக் காட்ட இப்படியா நடந்துக்கொள்வது… த.வெ.க-காரங்களே அமைதியா இருக்கும்போது, நகராட்சி தலைவியின் கணவர் ரொம்பவும்தான் ஆடுறாரு…’ என்று கொதிக்கிறார்கள் தி.மு.க உடன்பிறப்புகள். இவ்விவகாரம்அண்ணா அறிவாலயத்துக்கும் புகாராகச் சென்றிருக்கிறதாம்.