மகுடம்: “எனது தந்தை சுமார் 4.5 மணி நேரம் அவருக்காகக் காத்திருந்தார்!” – விஷால் | Vishal’s Emotion at Magudam Trailer Launch: Talks Career Struggles & Debut

Spread the love

ஆர்.பி. சௌதரி சார் என் மீது வைத்த நம்பிக்கை ஒருபுறம் என்றால், திருப்பூர் சுப்பிரமணியம் அண்ணன் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையும்தான் ‘மகுடம்’ திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வர முக்கியக் காரணம்.

அவர் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகக் கூடாது என்பதற்காகவே எனது உழைப்பை இன்னும் அதிகமாகக் கொடுத்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஏனெனில், கேமராவுக்கு முன்னால் நடிகனாகவும், கேமராவுக்குப் பின்னால் இயக்குநராகவும் ‘ஸ்பிளிட் பெர்சனாலிட்டி’ போல நான் செயல்பட வேண்டியிருந்தது. நான் நடிக்கும்போது எடிட் பாயிண்டிற்காக ‘ஆக்ஷன்’ சொல்லி ஒரு விநாடி கழித்தே நடிப்பேன்.

அதைத்தான் சக நடிகர்களிடமும் கூறினேன். எந்தவித ஈகோவும் இல்லாத சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் கிடைத்ததால்தான் இந்தப் படம் இந்த அளவிற்குச் சிறப்பாக உருவாகியிருக்கிறது. நடிகர்களிடம் இருந்து சரியான நடிப்பை எப்படி வேலை வாங்குவது என்பதை நான் இயக்குநர் பாலா அண்ணனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

விஷால் - மகுடம்

விஷால் – மகுடம்

இயக்குநராக வேண்டும் என்பது எனது 35 வருட கனவு. அர்ஜுன் சாரிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்க்க எனது தந்தை சுமார் 4.5 மணி நேரம் அவருக்காகக் காத்திருந்தார்.

“உன்னைப் பள்ளியில் சேர்க்க எப்படி வரிசையில் நின்றேனோ, அதேபோல் உன் எதிர்கால வேலை வாய்ப்புக்காகவும் நிற்பேன்” என்று கூறி எனது கனவை நனவாக்கிய என் தந்தைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அதேபோல், ‘சண்டக்கோழி’ படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று என் அம்மாதான் பிடிவாதமாக இருந்து என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினார்” எனப் பகிர்ந்துகொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *