நகர்ப்புறங்களில் கர்நாடக பொன்னி ஆந்திர பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள். சமூக அந்தஸ்துக்காக சில வகை அரிசிகளை சாப்பிடுகிறார்கள். அந்த அரிசிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலைவாசி உயர்ந்திருப்பதைப் போல தெரிகிறது. தமிழகத்திலேயே விளையும் அரிசிகளின் விலை இயல்பாகத்தான் இருக்கிறது. பதுக்கல்களை தடுப்பதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பாமாயில் விநியோகம் முறையாக நடந்துகொண்டுதான் இருக்கிறது’ என்றார்.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், ‘நகர்ப்புற மக்களின் பழக்கவழக்கங்களை குறித்துதான் சமூக அந்தஸ்து எனக் குறிப்பிட்டேன். நான் பிறந்ததிலிருந்தே ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன். ‘நீங்கள் ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறீர்கள் எனில் கடந்த ஆட்சியிலும் ரேஷன் அரிசி நன்றாகத்தானே போட்டிருக்கிறார்கள்…’ என நிருபர் கேட்க, ‘அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்’ என்றார். ‘உங்களுக்கு எப்படி அரிசி கார்டு கிடைத்தது..’ எனக் கேட்க, ‘அமைச்சராகும் முன்பு வரை நான் அரிசி கார்டைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்’ என்றார்.