நம்மிடையே பேசுகையில், “‘மண்டாடி’ நாங்க நினைச்சதை விட ரொம்ப பெரிய படமா வெளிய வந்திருக்கு. கதை, வசூல்னு மக்கள் இந்த படத்தைக் கொண்டாடுறாங்க.
உண்மையிலேயே எனக்கு தியேட்டர் போய் என்னோட நடிப்பைப் பார்க்குறதுக்குப் பெரியளவுல விருப்பமிருக்காது. அது ஏன்னு தெரியல. தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகான்னு எல்லா இடங்கள்லயும் ‘மண்டாடி’ நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி.

இப்போ இன்ஸ்டாகிராம், ட்விட்டர்ல நிறைய மெசேஜ்கள் வருது. முக்கியமா, ‘படத்துல வர்ற உறவின் பக்கங்களை ரொம்ப கவனமா கையாண்டிருந்தீங்க’னு சொல்றாங்க.
சிங்காரம், காளி, ஏஞ்சல்னு மூணு பேருக்குமான எமோஷனல் டிராமா காட்சியில நல்லா நடிச்சிருந்ததாக நிறைய பேர் பாராட்டுறாங்க. அதை நான் பர்சனலா ரொம்ப முக்கியமான பாராட்டாகப் பார்க்குறேன்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எனக்கு முதல்ல கதையின் லைன்தான் சொன்னாரு. அப்புறம் ஸ்கிரிப்ட் படிக்கக் கொடுத்தாரு. நான் அதைப் படிச்சுட்டு, ‘எனக்கு சாட்டாப்புலி கேரக்டர் பண்ண விருப்பமா இருக்கு’னு கேட்டேன்.
ஆனா அவர் சிங்காரம் கேரக்டருக்கு நான் பண்ணா நல்லா இருக்கும்னு யோசிச்சிருக்கார். சரி, நம்ம மேல ஒருவர் இவ்வளவு நம்பிக்கை வைக்கும்போது முயற்சி பண்ணலாம்னு இறங்கினேன்.
இந்தப் படத்துக்காக நாங்க இராமநாதபுரத்தைச் சேர்ந்தவராக முழுமையாக மாறிட்டோம். லுக் டெஸ்ட்லேயே பாதி விஷயம் வந்துடுச்சு.