மதிய உணவில் முட்டை நிறுத்தம் : மேற்கு வங்க அரசு பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி – Kumudam

Spread the love

மேற்கு வங்கத்தில் பாஜக முதன் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல மாற்றங்களை செய்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் வாரத்தில் ஒரு நாள் முட்டை வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், அங்கு பாஜக ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஸ்வபன் தாஸ் குப்தா, இனி பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின்கீழ் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தை ‘இஸ்கான்’ அமைப்பு ஏற்று நடத்தும் என்று அறிவித்தார். இந்நிலையில், தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்திலிருந்து முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் முழுமையாக சைவமாக மாற்றப்படுவதாகவும், இனி முட்டைக்குப் பதிலாக பனீர், ராஜ்மா, சோயாபீன்ஸ் போன்றவை வழங்கப்படும் என்றும் இஸ்கான் அமைப்பின் நிர்வாகி ராதாராமன் தாஸ் தெரிவித்துள்ளார். 

மாணவர்களுக்கான மதிய உணவில் இருந்து முட்டை நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய அரசாங்கம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மறுப்பதாகவும், மாநிலத்தில் சைவ உணவைத் திணிக்க முயற்சிப்பதாகவும் திரிணாமுல் காங்கிரசு இரு பிரிவுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *