படப்பிடிப்பு முடிந்தவுடன் வேலை முடிந்தது என நான் கிளம்ப தயாரானேன். ஆனால், ரொனால்டோ என்னை விடுவதாக இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு வருமாறு ரொனால்டோ அன்போடு அழைத்தார். `நீங்கள் எனக்கு நிறைய நேரம் கொடுத்துவிட்டீர்கள், இதுவே போதும்’ என்று நான் பலமுறை கூறியும், ரொனால்டோ அதை கேட்கவில்லை.’’ என்று மனம் திறந்து நெகிழ்வாகப் பேசியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட்.
இவர்களது இந்த கூட்டணியில், ரொனால்டோவின் யூடியூப் சேனலில் “I Meet MrBeast To Break The Internet!!” என்ற வீடியோவும், மிஸ்டர் பீஸ்டின் சேனலில் “Beat Ronaldo, Win $1,000,000” என்ற வீடியோவும் வெளியாகி பார்வையாளர்களின் சாதனைகளை முறியடித்தன. இந்த வீடியோக்கள் ரொனால்டோவின் யூடியூப் சேனல் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
“ரொனால்டோ ஒரு மிகச் சிறந்த மனிதர், நான் நினைத்ததை விட அவர் என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார்” என்று மிஸ்டர் பீஸ்ட் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். உண்மையான ஆளுமை என்பது வெறும் சாதனைகளில் மட்டுமல்ல, மற்றவர்களை அவர்கள் நடத்தும் விதத்திலும் இருக்கிறது என்பதை இந்த சுவாரசியமான சந்திப்பு நமக்கு உணர்த்துகிறது.