மதுராந்தத்தில் வாக்குக்கு பணம் கொடுக்க வந்த தவெகவினர்? விரட்டியடித்த பொதுமக்கள்.. இரவில் பரபரப்பு | TVK attempts to distribute money to voters in Maduranthakam; public chases them away

Spread the love

Tamilnadu

oi-Mani Singh S

செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதியில் நேற்று இரவு பணப்பட்டுவாடா செய்ய வந்த தவெகவினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மோச்சேரி பகுதியில் தவெகவினர் பணப்பட்டுவாடா செய்ய வந்ததாகவும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை தவெகவை சேர்ந்த இளைஞர்கள் பணம் கொடுக்க முயன்றதாகவும் கூறி அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அங்கு களம் சூடுபிடிக்க தொடங்கியது. தவெக சார்பில் ஏற்கனவே அதிமுகவில் போட்டியிட்டு ராஜினாமா செய்த மரகதம் குமரவேலுக்கே தவெக சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து விலகிவிட்டு மீண்டும் தவெகவுக்கு ஓட்டு கேட்க சென்றதால் அப்பகுதி மக்களே அவரை விரட்டியடித்த சம்பவங்களும் நடந்தது.

Maduranthakam TVK

எனினும் தவெகவினர் வீடு வீடாக, தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய்யும் ஒரு நாள் முழுக்க ரோடு ஷோ சென்றும், ஒரு நாள் பிரசார கூட்டத்தில் பேசியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தன்னை தூய சக்தி என்றும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி வரும் தவெகவினர், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுத்ததாகவும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் சிபிஎம் பெ சண்முகமே தெரிவித்து இருந்தார்.

Maduranthakam TVK

இந்த நிலையில்தான் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மோச்சேரி பகுதியில் நேற்று இரவு தவெகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை தவெகவை சேர்ந்த இளைஞர்கள் பணம் கொடுக்க முயன்றதாக சொல்லப்படும் நிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுகவினர் பணம் வழங்க வந்த தவெகவினரை விரட்டி அடித்தனர்.

Maduranthakam TVK

இதையடுத்து அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. அங்கு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பணப்பட்டுவாடா செய்ய வந்த தவெகவினரை பொதுமக்களும் அதிமுகவினரும் இணைந்து விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெக தன்னை தூயசக்தி என்றும் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் தவெகவினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர முயற்சிப்பதாக குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்து வரும் நிலையில், இதுதான் தூய சக்தியின் லட்சணமா? என்று பொதுமக்களும் கேள்வி எழுப்பியதை பார்க்க முடிந்தது.

Maduranthakam TVK

மதுராந்தம் தொகுதியை பொறுத்தவரை தவெக சார்பில் கடந்த முறை அதிமுக சார்பாக வென்றுவிட்டு ராஜினாமா செய்த மரகதம் குமரவேலே மீண்டும் களமிறங்கியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *