மதுரையில் பிரமாண்ட அச்சு-பேக்கேஜிங் எக்ஸ்போ! 180+ ஸ்டால்களில் உலகளாவிய பிராண்ட் இயந்திரங்கள் சங்கமம் | Print & Packaging Expo in Madurai! 180+ Stalls Showcase Global Brand Machinery

Spread the love

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (Madurai District Tiny & Small Scale Industries Association – MADITSSIA) நடத்தும் 11ஆவது தி பிரிண்ட் என் பேக் 2026 ( The Print N Pack 2026) கண்காட்சி மதுரை, விரகனூர் சுற்றுச்சாலைக்கு அருகில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவக்கல்லூரி வளாகத்திலிருக்கும் ஐடா ஸ்கட்டர் வணிக அரங்கத்தில் ஜூலை 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

இக்கண்காட்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறு, குறு, கனரக அச்சு இயந்திரங்கள் பார்வைக்கும், பார்வையாளர்களின் மாதிரி பயன்பாட்டிற்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.

டிசர்ட் பிரிண்டிங், பேப்பர் பிரிண்டிங், பேப்பர் கட்டிங், மஞ்சப்பை, கட்டைப்பை, விசிட்டிங் கார்டு, மரச் சதுரங்கம், சிலை வடிவமைப்பு, அடையாள அட்டை ரோப் பிரிண்டிங், பரிசுப் பொருளில் பிரிண்டிங், பேங்கேஜிங்குத் தேவையான ஆட்டோமேசன் இயந்திரங்கள், அட்டைப்பெட்டி வடிவமைப்பு இயந்திரங்கள் எனப் பிரிண்டிங் & பேக்கேஜிங்குத் தேவையான அ முதல் ஃ வரை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. பார்வையாளர்களையும் வியாபாரிகளையும் வெகுவாகவே கவர்ந்திழுக்கின்றன.

அச்சு-பேக்கேஜிங் எக்ஸ்போ

அச்சு-பேக்கேஜிங் எக்ஸ்போ

தி பிரிண்ட் என் பேக் 2026 தொழில் கண்காட்சியின் தலைவர் பொன்குமார் பகிர்ந்துகொண்டது,

“தமிழ்நாட்டில் பிரிண்டிங் & பேக்கேஜிங் துறையின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்? அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் வளர்ச்சி நிலை என்ன?”

பத்து வருடத்திற்கு முன் ஆஃப் செட்டில் பிரிண்டிங் செய்தோம். ஆனால் இன்னைக்கு டிஜிட்டல், லேசர், லேட்டஸ்ட் அப்டேட்னு எங்கையோ போய்விட்டது. அப்போதெல்லாம் 50,000 முதல் 1,00,000 வரைதான் ஆர்டர் எடுத்து ஓட்ட முடியும்.

ஆனால் இன்றைக்கு டிஜிட்டல் பிரிண்டிங்கில் குறைந்தது 5 முதல் 10 காப்பியே அச்சடிக்க முடிகிறது. உறுதியாகச் சொல்லுகிறேன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி எண்ணிப் பார்க்க முடியாத வண்ணம் இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *