PBKS vs LSK : லக்னோ அணியை எப்படி வீழ்த்தியது ஸ்ரேயாஸின் பஞ்சாப் கிங்ஸ்? |PBKS vs LSG Match Highlights: How Shreyas Iyer Led Punjab Kings to a Dominant Win Over Lucknow Super Giants

Spread the love

நாமளே பேட்டிங் ஆடியிருந்தா ஒரு 180-ல் நிறுத்திருப்போம், இப்போ இவங்க அடிச்ச 254-ஐ எப்படி சேஸ் பண்றது?” என ரிஷப் பண்ட் மைண்ட் வாய்ஸ் மைதானம் முழுக்கக் கேட்டது. இமாலய இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் அணி, லக்னோவின் “லக்’-கை ஆரம்பத்திலேயே காலி செய்துவிட்டது.

ஜெயிக்கிறமோ தோக்குறமோ முதல்ல சண்ட செய்யணும் என்ற எண்ணத்தில், லக்னோ ஓப்பனர்கள் மிச்சல் மார்ஷ் மற்றும் பதோனி இணையினர் இந்த இமாலய ஸ்கோரை பவர் பிளேவிலிருந்தே அதிரடியாக தொடங்கினர். ஆனால் 6வது ஓவரின் கடைசி பந்திலேயே பதோனி 35 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தனது பழைய ஃபார்மில் ஆட்டத்தை ஆரம்பித்து, ஒற்றைக் கை ஷாட்களின் மூலம் லக்னோ ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து கொண்டிருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிற்காமல், மார்ஷ் மற்றும் பண்ட் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.

இந்த விக்கெட்களின் மூலம் மிஞ்சி இருந்த நம்பிக்கை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்தது.அடுத்து வந்த பேட்டர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக,

கடைசியில் எய்டன் மார்க்ரம் ஒரு குட்டி கேமியோ ஆடி, லக்னோவை 200 ரன்கள் வரை அழைத்துச் சென்றார். ஆனாலும், தோல்வி தவிர்க்க முடியாததானது.

இந்த மேட்ச் ரிசல்ட்டால் பஞ்சாப் ரசிகர்களை விட சென்னை ரசிகர்கள்தான் செம ஹேப்பி. ஏன்னா, லக்னோ ஜெயிச்சிருந்தா புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே-வை பின்னுக்குத் தள்ளியிருக்கும். இப்போ சென்னை 7வது இடத்திலேயே ‘சேஃப்’ ஆக இருக்கிறது, லக்னோ 8வது இடத்திலேயே தங்கிவிட்டது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து முதலிடத்திலேயே அசைக்க முடியாத அணியாக நீடிக்கிறது ஷ்ரேயஸ் தலைமையிலனா பஞ்சாப் கிங்ஸ்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *