மேலும் மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வாயிலாகவும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த கடையானது கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டதாகவும் கடையில் ஏராளமான பொருள்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,”கடையில் 3 நபர்கள் சுவர் மற்றும் கதவை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கடையில் இருந்த பொருட்களில் 30 சதவீத பொருட்கள் திருடு போய் உள்ளது. திருடு போன நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.