தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று இன்றுடன் 186 நாள்கள் ஆகிறது. புதிய ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால், ஆட்சிக் களத்தைக் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே சில காலம் ஆகும். என்றாலும், தவெக வேட்பாளர்கள், குறிப்பாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போன்றோர் தேர்தல் பிரசாரங்களில் `6 மாசத்துல தமிழ்நாட்டையே எப்படி மாத்துறோம்னு பாருங்க” என உறுதியோடு பிரசாரம் செய்திருந்தனர்.
அதுபோலவே, ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் எதிரான நடவடிக்கைகள், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், தாய்மாமன் சீர், அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், முதற்கட்டமாக 3 இலவச கேஸ் சிலிண்டர் அறிவிப்பு, பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப் படை, போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை, விவசாயக் கடனில் பகுதி தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என முன்நகர்ந்து முதற்கட்ட நம்பிக்கையைப் பெற்றது.

அதேநேரம், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னடைவு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், செஞ்சி சிறுமி மாயமாகி 30 நாள்களைக் கடந்த நிலையிலும், தொடர் குழந்தைகள் கடத்தல் என காவல்துறையின் செயல்பாட்டில் சுணக்கம், மெத் போதைப்பொருள் விவகாரம், பாலியல் தொல்லை விவகாரம், ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் விவகாரம் என தொடர் சர்ச்சையில் சிக்கும் தவெக நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் என இன்னொருபக்கம் குற்றச்சாட்டுகளும் நீளுகிறது.