மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்து தற்போது அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகின்றன.
வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்களை கோட்டைமேட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 20 முதல் 30 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டன.
ஆனால் தற்போது வரை கொள்முதல் செய்யப்படாமல் சுமார் 10,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் கொட்டி கிடப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
மேலும் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக நெல் மூட்டைகள் மற்றும் நெற்குவியல்கள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமடைந்து வருகின்றன.

இதுகுறித்து போடிநாயக்கன்பட்டி விவசாயிகள் கூறுகையில், “கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து கொட்டி உள்ளோம். பல விவசாயிகளின் நெல்கள் மூடைகளாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. சிலருக்கு சாக்கு வரவில்லை எனக்கூறி நெல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளது.