மதுரை வடக்கு தொகுதி: வெற்றி வாகைசூடும் திமுக; திட்டங்களைப் பட்டியலிடும் தளபதி! | Victory to dmk thalapathi of Madurai North constituency!

Spread the love

‘‘உதயசூரியன் களம் காணும் 175 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு இப்போதே உறுதி என்று கணிக்கப்படும் பட்டியலில் மதுரை வடக்கு தொகுதியும் ஒன்று”‘ என உறுதியாகச் சொல்கிறார்கள் மதுரை மக்கள்.

திமுக வேட்பாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்குச் செய்த நல்ல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள்!

“வண்டியூர் பூங்காவைச் சீரமைத்து தரமான நடைப்பயிற்சித் தளம் அமைச்சு கொடுத்திருக்கார்.”

“அரசு இராஜாஜி மருத்துவமனையை மேம்படுத்தி ஏழை எளியவர்களுக்கும் பலன் கிடைக்கச் செய்திருக்கிறார்.”

“கோரிப்பாளையம், மேலமடை மேம்பாலங்களைச் சீரமைத்து, போக்குவரத்து வசதி செஞ்சிருக்கார்.”

“கலைஞர் நூலகம், செல்லூர் பந்தல்குடி கால்வாய், ரேஸ்கோர்ஸில் ஹாக்கி மைதானம், புதிய தொழில்நுட்பப் பூங்கா, வைகை வடகரை சாலை, புதிய மாவட்ட நீதிமன்ற கட்டிடம், சட்டக் கல்லூரிக்குப் புதிய கட்டிடம், சாத்தமங்கலம் மாணவர் விடுதி, ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மேம்பாடு,

கே.கே.நகர் ஆறுவழிச்சாலை, புதிய வெங்காய மார்க்கெட் கட்டிடம்ஞ் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தொகுதிக்கு எங்கள் தளபதி செஞ்சிருக்கும் வளர்ச்சிப் பணிகளை…” எனச் சிலாகித்துப் பேசுகிறார்கள் மதுரைக்காரர்கள்.

பிரசாரப் பயணம் மேற்கொண்டிருந்த தளபதியை நேரில் சந்தித்தால், ‘ரமணா’ பாணியில் புள்ளிவிவரங்களை அடுக்கி, ஆச்சரியப்படுத்தி விட்டார் அவர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *