மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. 1971-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய மம்மூட்டி, இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படங்களில் மலையாளம் மட்டுமல்ல… தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அடக்கம்.
இவரது நடிப்பும், திரைப்பட ஹிட்களும் இவருக்கு பாராட்டு தேடித் தந்ததோடு மட்டுமல்லாமல், விருதுகளையும் அள்ளித் தந்திருக்கிறது… தந்து வருகிறது.

இதுவரை மூன்று தேசிய விருதுகள், பதினோரு கேரள அரசு விருதுகள் என இவரது விருதுகள் பட்டியல் நீள்கின்றன.
1998-ம் ஆண்டு மம்மூட்டிக்கு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.
இதையடுத்து, இன்று (ஜூன் 23, 2026) இந்திய குடியரசுத் தலைவர் கையால் இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதினை “கலை’ பிரிவில் பெற்றுள்ளார்.