மரண தண்டனைக்கு தடை: ஐ.நா.வில் இந்தியா எதிர்த்து வாக்களித்தது ஏன்? | Why Did India Oppose UN Move to Pause Death Penalty?

Spread the love

சட்டத்திற்குப் புறம்பான, விசாரணையற்ற அல்லது தன்னிச்சையான கொலைகள் சட்டவிரோதமானவை மற்றும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

இவை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஆழமாகப் பாதிப்பதுடன், மிக அடிப்படையான மனித உரிமையான வாழும் உரிமையைப் பறிக்கின்றன.

“அரிதிலும் அரிதான’ வழக்குகளில் மட்டுமே விதிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ தண்டனையாக மரண தண்டனையை இந்தியா தருகிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதுவது, உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டியது மற்றும் தண்டனையைக் குறைப்பதற்கான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்தியச் சட்டத்தில் இருக்கிறது” என்று பேசினார்.

மரண தண்டனை

மரண தண்டனை
pixabay

மரண தண்டனைத் தடை தீர்மானத்திற்கு எதிரான இந்தியாவின் இந்த வாக்கு, 2016, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் எடுத்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும்.

அமெரிக்கா எதிர்ப்பு; பிரான்ஸ் ஆதரவு

இறையாண்மை மற்றும் தீர்மானத்தின் வாசகங்கள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவும் இந்தத் தடை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

அதே சமயம், பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றுள்ள பிரான்ஸ், உலகளவில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஒரு முக்கியப் படி இது என்று குறிப்பிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *