அப்போது அவசர சிகிச்சைக்கு ஏற்கெனவே ஒரு முதியவர் காத்திருந்துள்ளார். அவரிடம் எம்.எல்.ஏ., சரவணன் விசாரித்தபோது, “நான் சிகிச்சைக்கு வந்து அரை மணி நேரமாச்சு. நர்ஸ், டாக்டர்களைக் காணோம். இரண்டு மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்தேன். பதில் இல்லாததால் இங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையின் பழைய மற்றும் புதிய கட்டடங்களில் உள்ள பல்வேறு அறைகளிலும் தேடியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனடியாகக் காணப்படவில்லை என கூறப்படுகிறது. பின்னர்,

ஒரு மருத்துவர் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும், அங்கு வந்த செவிலியர் கதவைத் தட்டி மருத்துவரை எழுப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கதவைத் தட்டியும் மருத்துவர் வெளியே வராததால், செவிலியர் தொலைபேசி மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியே வந்த மருத்துவரிடம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏ., சரவணன், “இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.