மழை,குளிர் காற்று… சட்டென சளி பிடிக்காமலிருக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். | Rain, cold breeze… Eat these foods to prevent catching a cold quickly

Spread the love

இஞ்சி சேர்த்த டீ, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்தரைத்த துவையல் சாப்பிடலாம். ஓமத்தை வறுத்துப்பொடித்துக் கொள்ளவும். அதை சிறிய துணியில் வைத்துக் கட்டி, அவ்வப்போது மூக்கின் அருகில் வைத்து இழுக்கலாம். இது  மூக்கடைப்பை சரிசெய்து, சுவாசத்தை சீராக்கும். பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.

நொச்சி, ஆடாதோடை, யூகலிப்டஸ் போன்ற இலைகளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். (இந்த இலைகளைக் கஷாயமாக உள்ளுக்குக் குடிக்கக் கூடாது). வெற்றிலையில் லேசாக நல்லெண்ணெய் தடவி, மிதமான சூடு செய்து மூக்கின் மேல் பகுதியில் வைக்கலாம்.

இது அதிக சூடாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். துளசி இலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். சர்க்கரைநோய் இல்லாதவர்கள் இஞ்சியைக் கொதிக்க வைத்துப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். புதினா இலைகளுடன் மிளகுத் தூள் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இஞ்சியைக் கொதிக்க வைத்துப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இஞ்சியைக் கொதிக்க வைத்துப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

தனியா, சீரகம், மிளகு, பூண்டு ஆகிய நான்கையும் சேர்த்துச் செய்த கஷாயம் சைனஸிற்கு நல்லது. தூதுவளைக் கீரையைச் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிச் சாப்பிடலாம். பூண்டைப் பாலில் வேகவைத்துச் சாப்பிடலாம். வெந்நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து அடிக்கடி வாய்க் கொப்பளிக்க வேண்டும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கொண்டு நல்லெண்ணெய் கொப்பளிப்பது (Oil Pulling) சிறந்தது. மிளகை ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி வரும் புகையையோ அல்லது மஞ்சள் புகையையோ சுவாசிப்பது (புகை பிடித்தல்) சளியைக் குறைக்க உதவும்.

மழை மற்றும் பனிக்காலத்தில் கூடியவரை வெதுவெதுப்பான நீரையே நாள் முழுவதும் குடிப்பது நல்லது. மிளகு, சீரகம் இரண்டையும் சுத்தமான துணியில் கட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து அந்த நீரை வெதுவெதுப்பாக அவ்வப்போது குடிக்கலாம். எப்போதும் ஃப்ரெஷ்ஷான, சூடான உணவுகளைச் சாப்பிடுவது,  குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது போன்றவையும் முக்கியம். 

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) முறையைச் சரியாகச் செய்து வரும்போது, தலைபாரம் மற்றும் சைனஸ் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

சித்த மருத்துவர் வரலட்சுமி:

சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிகிறார். இத்துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *