மாங்குடி, சீமான் என வலுவானவர்களையே வீழ்த்திய பிரபு யார்? | TK Prabhu, who defeated seeman in karaikkudi

Spread the love

காங்கிரஸின் பாரம்பரியம், திமுக – அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக “ஆப்பு’ வைத்திருக்கிறது தவெக.

ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது ‘வெற்றிக் கோட்டையாக’ மாற்றியிருக்கிறார் தளபதி விஜய்.

தமிழகமே உற்றுநோக்கிய ஸ்டார் தொகுதி காரைக்குடியில், அதிரடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் தவெக-வின் டி.கே. பிரபு. ஜெர்மனி, லண்டன் எனப் பட்டம் பெற்ற பல் மருத்துவரான இவரை, தொடக்கத்தில் ‘ரீல்ஸ் டாக்டர்’ என்று கிண்டல் செய்தவர்கள் உண்டு.

தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் காங்கிரஸின் பாரம்பரியக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்.

இவருடைய தந்தை துரை கருணாநிதி, தாயார் சரஸ்வதி ஆகிய இருவரும் அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் முன்னரே நன்கு அறிமுகம் பெற்றவர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களிலும் களத்திலும் சளைக்காமல் சுழன்றவர். காரைக்குடியில் உயர்தர நவீனத் தரத்தில் பிரமாண்டமான டென்டல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். தவெகவில் இணைந்து சிவகங்கை மாவட்டச் செயலாளராக கட்சிப் பணியாற்றி வருகிறார்.

சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடி, அமமுக-வின் தேர்போகி பாண்டி, எல்லாவற்றுக்கும் மேலாகத் தனிப்பெரும் பிம்பமாக நின்ற சீமான் என நான்கு முனைப் போட்டியில் அத்தனை ஜாம்பவான்களையும் தட்டித் தூக்கி ‘தவெக’ கொடியை நாட்டியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *