நீட் தேர்வு உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் குளறுபடிகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையின் வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தியதன் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் 27 வயதான மாடல் அழகி ரியா அஹிர் (Rhiya Ahir). அந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அவரைப் பலரும் போராட்டத்தின் அடையாளமாகக் கொண்டாடினர்.

ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான அவதூறுகளும், இணையவழி அச்சுறுத்தல்களும் கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ரியா, “சில குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் உட்பட பலர், `140 ரூபாய்க்கு உடலை விற்கும் பெண்” போன்ற மிகவும் இழிவான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது சாதாரண கேலிச்சித்திரங்கள் அல்லது ‘ட்ரோல்’ கிடையாது, மிகப்பெரிய குற்றச் செயல். நான் மாணவர்களுக்காக குரல் கொடுத்தேன். இப்போது துன்புறுத்தப்படுகிறேன்