Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.
சில விதமான மாரடைப்புக்கு நைட்ரேட் மாத்திரையைக் கொடுக்கக்கூடாது என்கிறார்கள். குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் மாத்திரைகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்… நைட்ரேட் மாத்திரையை யார், ஏன் தவிர்க்க வேண்டும்… தெளிவாகச் சொல்லவும்.
-Writer, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

நமக்கு இடது பக்க இதயம் (Left ventricle), வலது பக்க இதயம் (Right ventricle) என இரு பகுதிகள் உள்ளன. அதில், வலது பக்க இதயத்திற்கு மாரடைப்பு (Heart attack) ஏற்பட்டால், அவர்களுக்குப் பொதுவாகவே ரத்த அழுத்தமானது மிகக் குறைவாக இருக்கும்.
வலது பக்க இதய மாரடைப்பின் போது ரத்த அழுத்தம் 100-க்குக் கீழ் இருந்தால், அவர்கள் கண்டிப்பாக நைட்ரேட் (Nitrate) மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. அது மிக ஆபத்தாக முடியலாம்.