“அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தை போல் பின்னால் போனவர்களுக்கும் பாஜக-வின் கொள்கை புரியவில்லை” – இப்ராஹிம் | Vellore Ibrahim controversy press meet about annamalai

Spread the love

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயத்தில் திமுக, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியது போல நாங்களும் செய்வோம் என இவர்கள் பேசுகிறார்கள். திமுக-வின் கொள்கைதான் இவர்கள் கொள்கை என்றால் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்?

கொள்கை இல்லாதவர்களால் கட்சியில் நீடிக்க முடியாது. பாஜக-வில் தேசம் முதன்மையானது என்ற மனப்பான்மையோடுதான் இணைவார்கள். அண்ணாமலையாக இருக்கட்டும், அவர் பின்னால் போகும் ஆட்டு மந்தையாக இருக்கட்டும், அவர்களுக்கு கட்சியின் கொள்கை புரியவில்லை.

ஊடகங்களில் சரளமாகப் பேசி, எதிர்க்கட்சிகளைத் தாக்கினால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். அப்படி நினைத்தவர்கள் வெளியேறியுள்ளனர், இதனால் பாஜகவிற்கு எந்த இழப்பும் இல்லை.

கடந்த காலத்தில் கல்யாண் சிங், உமாபாரதி, எடியூரப்பா போன்ற பெரும் தலைவர்கள் கட்சியை விட்டுச் சென்றாலும், மீண்டும் திரும்பி வந்தனர். சித்தாந்த அடிப்படையில் அண்ணாமலை பேசியது உண்மையாக இருந்தால் தெளிவு பெற்று திரும்புவார், சில்லறைகளுக்காகச் சென்றிருந்தால் வரமாட்டார், அப்படிப்பட்டவர்கள் எங்களுக்குத் தேவையும் இல்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *