மாஸ்கோ மீது.. மிகப்பெரிய தாக்குதல்! அமைதி பேச்சுவார்த்தைக்கு நடுவே.. ஆட்டம் போட்ட உக்ரைன்! | Rampage Amid Peace Talks: Ukraine Launches Largest Drone Attack on Moscow in Two Years as G7 Meets

Spread the love

International

oi-Halley Karthik

மாஸ்கோ: ஜி7 மாநாட்டில் உலக தலைவர்கள், அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்கியுள்ளது.

Rampage Amid Peace Talks

மாஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஸ்ப்ரோம் நெஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்தின் மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ரஷ்யா எங்களை தாக்குகிறது, இதையெல்லாம் கேட்க ஆள் இல்லையா? என்று பரிதாபமாக கேள்வி எழுப்பிக்கொண்டே, மறுபுறம் கொடூர தாக்குதலை உக்ரைன் நடத்தியிருக்கிறது. இன்று நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக நெஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய புகை அப்பகுதியை முழுமையாக மூடியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களான ஷெரெமெட்டியேவோ, டோமோடெடோவோ மற்றும் வனுகோவோ ஆகியவற்றிலிருந்து அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஜெலன்ஸ்கி பதிலடி

இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “இது ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு அளிக்கப்பட்ட நியாயமான பதிலடி” என்று கூறியுள்ளார். சமீபத்தில் கீவ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டார்மிஷன் கதீட்ரல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

டிரம்பின் ஆதரவை நாடும் உக்ரைன்

மறுபுறம், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகளில் ஜெலென்ஸ்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஜி7 (G7) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்து, போரை நிறுத்தத் தேவையான ஆதரவை அவர் கோரியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள அமைதித் திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

ரஷ்யா பதில்

உக்ரைனின் இந்தத் தாக்குதலை முறியடித்ததாகக் கூறியுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மாஸ்கோவை நோக்கி வந்த சுமார் 200 ட்ரோன்கள் உட்பட மொத்தம் 555 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலால் மாஸ்கோவில் எரிபொருள் விற்பனைக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பின்னணி இதுதான்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆசிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் நீண்ட தூரத் தாக்குதல் ஆயுதங்கள் ரஷ்யாவின் பொருளாதார மையங்களை இலக்கு வைப்பது, போரின் போக்கை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *