மின் கொள்முதல்: “பொதுமக்களை பாதுகாப்பதற்காகவே கூடுதல் செலவானாலும்…” – அமைச்சர் நிர்மல் குமார்| Minister Nirmal Kumar has provided an explanation regarding electricity procurement.

Spread the love

இதில் 3,000 மெகாவாட் மின்சாரம் குறைந்த விலையிலான பிற ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படுகிறது. பற்றாக்குறையாக உள்ள 500 முதல் 1,000 மெகாவாட் மின் தேவையை மட்டுமே இந்த அவசரக் கொள்முதல் மூலம் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் வெப்பமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது மின் தேவை அதிகமாக இருந்ததால் முழுமையான பராமரிப்புப் பணிகளைச் செய்ய முடியவில்லை. இருப்பினும், இடைக்காலப் பராமரிப்புப் பணிகள் மூலம் வெப்பமின் நிலையங்களின் உற்பத்தித் திறன் கடந்த ஆண்டில் இருந்த 50%-ல் இருந்து தற்போது 73%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றாலும், தற்சமயம் 1,600 மெகாவாட் மின் உற்பத்தியை உடனே கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக அரசின் சொந்த மின் உற்பத்தித் திறன் (Own Generation) வெறும் 5,300 மெகாவாட் மட்டுமே. எஞ்சிய பெருவாரியான மின் தேவை முழுவதும் சோலார், காற்றாலை, மத்திய தொகுப்பு (Central Grid) மற்றும் அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே, சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், தடையற்ற மின்சாரத்தை வழங்கும் நோக்கிலும் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *