மீசைய முறுக்கு 2: கானா கலைஞர்களுக்காக ‘கானா கேங்’ தளத்தைத் தொடங்கிய ஆதி! | Meesaya Murukku 2: Hiphop Tamizha Adhi Launches ‘Gaana Gang’ Platform

Spread the love

ஹிப் ஹாப் தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் “மீசைய முறுக்கு 2′ படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகியோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் சக்சஸ் மீட், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் கானா கலைஞர்களுக்காக ‘கானா கேங்’ என்கிற தளத்தையும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடங்கியிருக்கிறார்.

மீசைய முறுக்கு 2

மீசைய முறுக்கு 2

அவர், “இந்தப் படத்தை நான் தேவா சாருக்குப் போட்டுக் காட்டியபோது, அவர் என்னைக் கட்டிப்பிடித்து இரண்டு நிமிடங்கள் அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தார்.

ஒரு கலைஞனாக இந்தக் கலை பற்றிச் சொல்ல நினைத்த எனக்கு, அந்தக் கானா கலையை கரையிலிருந்து திரைக்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞன் கட்டிப்பிடித்து முத்தமிட்டபோதே, இந்தப் படத்தை எடுத்ததற்கான முழு நிறைவும் அங்கீகாரமும் எனக்குக் கிடைத்துவிட்டது.

படம் முடிந்ததுமே அவர் என்னிடம், ‘என்னை சார், ஐயான்னு கூப்பிடக் கூடாது. ‘அப்பா’ன்னே கூப்பிடலாம், அந்த உரிமை உனக்கு இருக்கு’னு சொன்னாரு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *