மீனவர்களை குறிவைக்கும் அண்ணாமலை! திருச்செந்தூர் மாநாடு தள்ளிப்போனது ஏன்? – Kumudam

Spread the love

மது போதைக்கு எதிராக போதை ஒழிப்பு மாநாடு நடத்திய அண்ணாமலை, அடுத்ததாக கடற்கரையை சுத்தம் செய்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் நடத்த இருக்கிறார். மீனவர்களை குறிவைத்து இது நடத்தப்படுவதால் த.வெ.க. தலைவர் விஜய் என்ன செய்யப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ.க.வில் இருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ் அமைப்பை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்துவருகிறார் அண்ணாமலை, ‘மாதம் ஒரு தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படும். அதன்படி முதல் மாநாடு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் போதை ஒழிப்பு மாநாடாக நடத்தப்படும். இரண்டாவது மாநாடு, சுற்றுச்சூழல் மாநாடாக திருச்செந்தூரில் நடத்தப்படும்’ என அறிவித்தார். அதன்படி கடந்த ஜூலை 6ம் தேதி முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடந்தது. மாவட்டவாரியாக, நகரவாரியாக, ஒன்றியவாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. யார் செலவு செய்வார்கள்? ஆட்களை அழைத்து வருவது யார்? அமைப்பு இல்லாமல் கூட்டம் காட்ட முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் அடித்து நொறுக்குவதுபோல தானாகவே கூட்டம் கூடியது.

அதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் மாநாடு நடத்துவதற்கான வேலைகளை அப்பகுதி நிர்வாகிகள் செய்துவந்தனர். இந்நிலையில் திடீரென ஜூலை 26ம் தேதி நடைபெற இருந்த சுற்றுச்சூழல் மாநாடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதைவிட திடீர் திருப்பமாக சுற்றுச்சூழல் மாநாடு ஒத்திவைக்கப்பட்டு கடற்கரை ஓரங்களை சுத்தம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீதி லீடர்ஸ் அமைப்பின் முன்னணி நிர்வாகி எழுத்தாளர் பிரபாகரனிடம் கேட்டோம். “ஜூலை மாதம் 6ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த போதை ஒழிப்பு மாநாட்டைத் தொடர்ந்து, ஜூலை 26ம் தேதி திருச்செந்தூரில் சுற்றுச்சூழல் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது உண்மைதான். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்து பந்தல் போடும் பணிகளும் நடந்தன.

அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாரத்தான் ஓட்டம், உறுதிமொழி எடுப்பது, பெண்கள் பேரணி என பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிலையில், ‘தொடர்ந்து கூட்டத்தை கூட்டி மாநாடு நடத்தி பேசுவதைவிட மக்களுக்கு பயன்படும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தலாம்’ என பலரும் ஆலோசனை சொன்னார்கள். அதனால்தான் திருச்செந்தூர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

அதற்கு பதிலாக ஆகஸ்ட் 2ம் தேதி கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். இதற்கு நெய்தலை நேர்த்தி செய்’ என பெயர் வைத்திருக்கிறோம். ஒரேநாளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்த இருக்கிறோம்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, உவரி மற்றும் திருச்செந்தூர் ஆகிய நான்கு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். விளம்பரத்திற்காக சும்மா சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியாக அது இருக்காது.

கடற்கரையில் தேங்கியுள்ள கழிவுகளை முற்றிலுமாக அகற்றி வனத்துறை பரிந்துரை செய்துள்ள மரங்களை நட இருக்கிறோம். அந்தந்தப் பகுதி மக்களின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் பணியில் ஆர்வம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். தொடர்ந்து மாநிலம் முழுக்க கடற்கரையோரங்களில் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்” என்றார்.

கடற்கரையோரங்களில் இருக்கும் மீனவ இளைஞர்கள் பெரும்பாலும் த.வெ.க.வின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். ஏற்கெனவே அ.தி.மு.க. கடற்கரைப் பகுதியில் செல்வாக்கை இழந்துவிட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் செல்வாக்கை இழந்துவிட்டது தெரியவந்தது. இந்த நிலையில் மீனவர்களை குறிவைத்து அண்ணாமலை களம் இறங்கியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்கும் மீனவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். ‘நான் திருநீறு பூசும் இந்துவாக இருந்தாலும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது என் மத, இன அடையாளங்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என அண்ணாமலை சொல்லியிருக்கிறார்.

அதனால் அண்ணாமலை எந்த மதத்துக்கும் ஆதரவானவர் இல்லை என்கிற பிரசாரத்தை வீ தி லீடர்ஸ் அமைப்பினர் கடற்கரைப் பகுதிகளில் செய்துவருகிறார்கள்.
இதை த.வெ.க.வினர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வினிடம் கேட்டோம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு மீனவர்கள் மத்தியில் புகழ்பெற்ற தலைவராக இருப்பவர் விஜய், தமிழக மக்கள் எதிர்பார்த்த நேர்மையான ஆட்சியை விஜய் கொடுக்கிறார். மேல்மட்ட அளவில் லஞ்சம் குறைக்கப்பட்டுள்ளது.

விரைவில் கீழ் மட்டத்திலும் அது செயல்படுத்தப்படும். லஞ்சம் வாங்க அதிகாரிகள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் விஜய்யின் கொடி ஓங்கி பறக்கிறது. அதே நேரத்தில் புது இயக்கத்தை தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமாக நினைக்கிறார். கடற்கரையை சுத்தப்படுத்தி மீனவர்களை வசப்படுத்த நினைக்கிறார். தமிழக மக்கள் அண்ணாமலையை பா.ஜ.க.வின் இன்னொரு முகமாகத்தான் பார்க்கிறார்கள்.

மத்தியில் ஆளும்கட்சியான பா.ஜ.க.வில் இருந்து சாதிக்க முடியாதவர், தனி இயக்கம் கண்டு சாதித்துவிடுவாரா? பா.ஜ.க.வினரே அவரது வளர்ச்சியை விஜய் எதுவும் செய்யத் தேவையில்லை. ஏற்கெனவே மீனவர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர். எனவே அண்ணாமலையால் எதுவும் செய்ய முடியாது” 
தடுத்துவிடுவார்கள். எனவே முதலமைச்சர் புது ரூட்டு வொர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *