வார இறுதி நாள்களில் கூடுதலாக தூங்கி அந்தத் தூக்கக் குறைபாட்டை ஈடுசெய்வது தவறில்லை என்றாலும், அதை ஒரு பழக்கமாக மாற்றக் கூடாது. அதாவது, வார நாட்களில் சரியாகத் தூங்காமல் தாமதமாகத் தூங்கிவிட்டு, வார இறுதி நாள்களில் அதிக நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.
அவ்வாறு பழக்கமாக மாற்றும் போது, உடலின் கடிகார சுழற்சி (Circadian Rhythm) பாதிக்கப்படும். இதனால் எப்போது தூங்க வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதில் உடலுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிடும்.

வார இறுதி நாள்களாக இருந்தாலும் சரி, வார நாள்களாக இருந்தாலும் சரி, வழக்கமாக படுக்கைக்குச் செல்லும் நேரமும், காலையில் எழும் நேரமும் சீராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக அரை மணி நேரம் வித்தியாசம் இருக்கலாமே தவிர, பெரும்பாலும் ஒரே சீரான நேரத்தைப் பின்பற்றுவதே உடலுக்கு நல்லது.
இருப்பினும், தீவிர தூக்கக் குறைபாடு ஏற்படும் போது மட்டும், வார இறுதியில் சற்று கூடுதலாக தூங்கி அதைச் சரிசெய்து கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.