தவெக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்குத் திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார். இந்தச் சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.

தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி எனக் குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் – பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியைத் திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு தினத்தந்தி பேப்பரைப் படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும்.