நானா படேகரின் பண்ணை வீடு புனே அருகில் உள்ள சிங்காட் அருகே உள்ள டோன்ஜே-கடக்வாஸ்லா பகுதியில் இருக்கிறது. இந்தப் பண்ணை வீடு சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பாலிவுட் பிரபலத்தின் வீடு போன்று அல்லாமல் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.
மரத்தாலான தளபாடங்கள், டெரகோட்டா தரையமைப்பு மற்றும் பசுமையால் சூழப்பட்ட பெரிய திறந்தவெளிகள் கொண்ட ஒரு எளிய வீடாக அமைந்துள்ளது. நானா படேகர் அங்கு விவசாயம் செய்து கால்நடைகளை வளர்த்து வந்தார். அவர் பயிர்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டதாகவும், மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயற்கையுடன் நெருக்கமாக இருப்பதை நான் விரும்புகிறேன். நான் இதயத்தில் ஒரு விவசாயி” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நானாபடேகரின் மறைவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட மாநில அரசியல் தலைவர்கள் சரத்பவார், சுப்ரியா சுலே, ஏக்நாத் ஷிண்டே உட்பட தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.
தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”நானா படேகரின் திடீர் மரணம் ஒரு பெரிய அதிர்ச்சியாகும். அவர் ஒரு சிறந்த நடிகராகவும், நண்பராகவும் இருந்தார். அவர் தனது முழு வாழ்க்கையையும் மராத்தி மற்றும் இந்தி சினிமாவிற்கு அர்ப்பணித்து இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பண்ணை வீட்டில் இறுதிச்சடங்கு
நானா படேகரின் இறுதிச் சடங்குகள் மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து நீர் பாதுகாப்புக்காகப் பாடுபடும் நானா படேகரின் நாம் அறக்கட்டளையின் அதிகாரி கணேஷ் தோரட் வெளியிட்டுள்ள செய்தியில், “நானா படேகரின் உடல் இன்று மாலை சுமார் 5 மணிக்குள் (புனேவிற்கு) கொண்டு வரப்படும், பின்னர் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது பண்ணை வீட்டின் வளாகத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்படும். இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த நடிகரின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மகாராஷ்டிராவின் கலாசார விவகார அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்ட செய்தியில், ”நடிகர் நானா படேகர் மராத்தி நாடகங்கள், மராத்தி மற்றும் இந்தி சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அவரது இறுதிச்சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று அமைச்சர் ட்வீட் செய்திருந்தார்.