மும்பையில் அனுமதியின்றி பஸ் நிறுத்தத்தை நீக்கிவிட்டு புது பஸ் நிறுத்தத்தை நிறுவிய சிவசேனா எம்.எம்.ஏ

Spread the love

மும்பை முழுக்க பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தங்கள் மும்பை மாநகராட்சியின் நிதியில் கட்டப்படுகிறது. அதில் மாநகராட்சி சின்னம் மற்றும் பஸ்கள் வரும் நேரம் குறித்த அறிவிப்பு போன்றவை இடம் பெற்று இருக்கும். மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்றை மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் நிர்வாகம் கட்டி இருந்தது. இந்த பஸ் நிறுத்தம் திடீரென காணாமல் போய்விட்டது. அதேசமயம் அந்த இடத்தில் புதிய பஸ் நிறுத்தம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதில் சிவசேனா எம்.எல்.ஏ முர்ஜி பட்டேல் புகைப்படம் மற்றும் அவரது பெயர் இடம் பெற்று இருந்தது. மாநகராட்சியின் அனுமதி இன்றி அந்த பஸ் நிறுத்தத்தை அகற்றிவிட்டு தானாக புதிய பஸ் நிறுத்ததை தயாரித்து நிறுவி இருந்தார்.

அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பட்டேல் இந்த பஸ் நிறுத்தத்தை கட்டி இருந்தார்.

அதில் மும்பை மாநகராட்சியின் சின்னமும் இடம் பெற்று இருந்தது. ஏற்கனவே இருந்த பஸ் நிறுத்தம் திடீரென இரவோடு இரவாக காணாமல் போய் விட்டது. பஸ் நிறுத்தம் காணாமல் போனதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இதை அடுத்து முறைப்படி போலீஸில் புகார் செய்துள்ளது. அதேசமயம் எம்.எல்.ஏ. முர்ஜி இந்த பஸ் நிறுத்தத்தை தானாக முன்வந்து நிறுவியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பட்டேல் கூறுகையில்,”இங்கு எந்த சட்டவிரோதப் பணியும் நடைபெறவில்லை. பழைய பேருந்து நிறுத்தத்தை அகற்றிவிட்டு புதியதைக் கட்டுவதற்குத் பெஸ்ட் மற்றும் மாநகராட்சியிடமும், வார்டு அலுவலகத்திலும் முறையான அனுமதிகளையும், தடையில்லாச் சான்றிதழ்களையும் நாங்கள் பெற்றுள்ளோம். பேருந்து நிறுத்தத்தைப் புதுப்பிக்க சட்டமன்ற உறுப்பினர் நிதி பயன்படுத்தப்பட்டது. எனது ஒதுக்கீட்டிலிருந்து இந்தப் பணிக்கு நிதியளிக்கப்பட்டதால் அதில் எனது பெயர் இடம்பெற்று இருந்தது. எந்தவொரு சட்டவிரோதச் செயலையும் செய்யவில்லை”என்று தெரிவித்தார்.

இது குறித்து மாநகராட்சி பெஸ்ட் குழு தலைவரான, சிவசேனாவைச் சேர்ந்த த்ருஷ்ணா விஸ்வஸ்ராவ் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மூலம் பெஸ்ட் நிர்வாகம் வருமானம் ஈட்டி வருகிறது. பேருந்து நிறுத்தங்களை அனுமதியின்றி மீண்டும் கட்டுவது அல்லது மாற்றுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *