மூடிய வந்தே பாரத் ரயிலின் தானியங்கி கதவுகள் – `BYE’ சொல்லப் போய் ₹36,000 ஃபைன் கட்டிய கதை! | Went to See Off Relatives, Travelled 140 km and Paid ₹36,000 Fine

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் உறவினர்களை ரயிலில் ஏற்றி வழியனுப்பச் சென்ற 12 பேர், வந்தே பாரத் ரயிலில் சுமார் 140 கி.மீ பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், ₹36,000 அபராதமும் செலுத்தியுள்ளனர்.

வாரணாசி – புதுடெல்லி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றபோது, தங்களது உறவினர்களை வழியனுப்புவதற்காக 12 பேர் ரயிலில் ஏறியுள்ளனர். அவர்களுக்கு இருக்கைகளைச் சரிசெய்து, உடைமைகளை வைக்க உதவியுள்ளனர்.

இதற்கிடையில் ரயிலின் தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டது ரயில் நகரும்போது பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தானியங்கிக் கதவுகளை உடனடியாகத் திறக்க முடியவில்லை. அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ரயிலும் புறப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ரயில்வே அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளனர்.

இதையடுத்து, ரயில் எட்டாவா (Etawah) சந்திப்பில் நிறுத்தப்பட்டது. அங்கு ரயில்வே அதிகாரிகள் 12 பேரையும் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.

பின்னர், முறையான பயணச்சீட்டு அல்லது நடைமேடைச் சீட்டு இல்லாமல் ரயிலில் ஏறியதற்காக ஒவ்வொருவருக்கும் ₹3,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி மொத்தம் ₹36,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

உறவினர்களை வழியனுப்பச் சென்றவர்கள், எதிர்பாராத விதமாக 140 கி.மீ பயணம் செய்து அபராதமும் செலுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *