கையை மீறும் AI! அமெரிக்கா-சீனா இடையே ‘ஹாட்லைன்’ உருவாக்கப்படுமா? மிகப்பெரிய எதிர்பார்ப்பு! | Will US and China Set Up a Hotline for Emergency Communication? Leaders Meet Today, Decision Awaited

Spread the love

International

oi-Halley Karthik

பெய்ஜிங்: அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே, அவசரக் காலங்களில் நேரடியாக பேசிக்கொள்ள ‘ஹாட்லைன்’ உருவாக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இன்று இரு நாட்டு தலைவர்களும் நேரில் பேசிக்கொள்கின்றனர். இந்த சந்திப்பில், இது தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

முன்னதாக அமெரிக்கா-சோவியத் ரஷ்யா இடையே பனிப்போர் நிலவிய காலங்களில் இதுபோன்று இரு நாடுகளுக்கும் இடையில் ஹாட்லைன் சேவை இருந்தது. இதற்கு ரெட் லைன் என்று பெயர். இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் அதிக அளவில் இருந்ததால், ஒரு சிறிய தவறான புரிதல் கூட.. உலக அழிவை ஏற்படுத்திவிடும். எனவே, தவறான புரிதலை பேசி புரிய வைக்க இந்த ஹாட்லைன் பயன்பட்டது.

US and China Set Up a Hotline

ஆனால், காலம் மாறியிருக்கிறது. இப்போது AI தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. AI ஏஜென்ட்கள், செக்யூரிட்டியை மீறி மற்ற நாடுகளின் ரகசியங்களை திருடியுள்ளன. குறிப்பாக மனிதர்களின் நேரடி உத்தரவு இல்லாமல்.. ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளின் டேட்டாக்களை திருட முயன்றிருக்கின்றன. அதுவே, சீன AI ஏஜென்ட் அமெரிக்காவின் ராணுவ தளத்திற்குள் நுழைந்திருந்தால்.. அல்லது அமெரிக்காவின் AI ஏஜென்ட் சீனாவின் ரகசிய கோப்புகளை திருட முயன்றிருந்தால்.. இந்நேரம் 3ம் உலகப்போரே வெடித்திருக்கும்.

இதுபோன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்திருக்கிறது. AI மூலம் உருவாக்கப்பட்ட தவறான உளவு தகவலால், மத்திய கிழக்கில் சென்ற சீன கப்பலில் அணு ஆயுதங்கள் இருப்பதாக நினைத்து.. அமெரிக்க அதிரடி தாக்குதலுக்கு ரெடியாகியிருந்தது. இது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரவ நிறைய வாய்ப்பு உள்ளது. இது குறித்து பேசிக்கொள்ளதான் ஹாட்லைன் தேவை.

ஒருவேளை தங்களின் AI ஏஜென்ட், தங்களின் கட்டுப்பாட்டை மீறி போய்விட்டது என்றால்.. அதை எதிரி நாட்டுக்கு தெரியப்படுத்த இது உதவும். இப்படி முன்கூட்டியே சொல்வதால், முக்கியமான தரவுகள் AI கைகளுக்கு போவதையும், இந்த சைபர் அட்டாக் திட்டமிட்டு நடக்கவில்லை.. இது ஒரு விபத்து என்கிற புரிதலை ஏற்படுத்தவும் ஹாட்லைன் உதவும்.

ஆனால், இதில் சில சிக்கல்களும் உள்ளன. ஏற்கெனவே அமெரிக்கா-சீனா இடையே ஹாட்லைன் இருந்தது. ஆனால், கடந்த 2023ம் ஆண்டு நடந்த சம்பவம் காரணமாக இந்த சேவை கைவிடப்பட்டது. சீனாவிலிருந்து ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பலூன் ஒன்று தவறுதலாக அமெரிக்கா பக்கம் போய்விட்டது. இதை அமெரிக்கா பார்த்த உடன், சீனாவை கூப்பிட்டு விசாரித்திருக்க வேண்டும். அப்படி செய்வதற்கு பதில்.. பலூனை சுட்டு வீழ்த்தியது. மட்டுமல்லாது சர்வதேச ஊடகங்களுக்கு.. சீனா தங்களை வேவு பார்க்க பலூனை அனுப்பியதாக கூப்பாடு போட்டுவிட்டது.

காதும் காதும் வைத்த மாதிரி பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை.. இப்படி மொத்த உலகத்துக்கும் சொல்லிவிட்டு ஹாட்லைன் மூலமாக சீனாவை தொடர்பு கொண்டது அமெரிக்கா. சீனா இந்த அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை. எனவே, இனி வரும் நாட்களில் இப்படி முரண்பட்டுக்கொள்ள கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, AI-க்கான ஹாட்லைன் சேவை உருவாக்கப்பட இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இந்த ஹாட்லைனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *