சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கட்சியில் ஏன் அடைக்கலம் கொடுத்தார் எனத் தவெகவைச் சேர்ந்தவர்களே சுகுமாறனுக்கு எதிராக முணுமுணுத்தனர். ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போதே பூபாலனை கட்சியில் இருந்து நீக்குவதாக சுகுமாறன் அறிக்கை வெளியிட்டார். பூபாலனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்ட பிறகு அவரை நீக்கி என்ன பயன், கட்சியில் சேர்க்கும் முன்னரே தெரிந்து கொண்டு சேர்த்திருக்கலாம் எனச் சுகுமாறனுக்கு எதிர் அணியினர் பேசி வந்தனர்.
இந்நிலையில்தான் தவெக நகரச் செயலாளர் பாலு, நிருபர் ஒருவரை மிரட்டினார். தவெக-வினர் மூன்று நிருபவர்களைத் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். சி.எம், மாவட்டச் செயலாளர் போட்டோவையும் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று சொல்லிதான் மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் புகார் அளிக்க பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னரும் மிரட்டல்கள் தொடர்வதாகச் சொல்கிறார்கள். தவெக தலைமை இது போன்ற செயல்களை ஊக்குவிக்காமல் கட்சி நிர்வாகிகளைக் கண்டிக்க வேண்டும் என்றனர்.
மாவட்டச் செயலாளர் சுகுமாறன் சார்பாக நிர்வாகி ஒருவர் சுகுமாறன் குறித்து காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்புவதாக திமுகவைச் சேர்ந்த பாரிபாலன், அதிமுகவைச் சேர்ந்த மணிமாறன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.