மேக்கேதாட்டு அணை கட்டுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.
தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளை அவர் கண்டுகொள்வதாக இல்லை. மேக்கேதாட்டு அணை தமிழ்நாட்டிற்குத் தான் பெரும்பாலும் பயன்படும் என்கிற கூற்றை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார்.
இன்று இந்தியப் பிரதமர் மோடி பெங்களூருவிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அவர் முன்னிலையில் டி.கே.சிவகுமார் காவேரி குறுக்கே அணைக் கட்டுவது குறித்துப் பேசியிருக்கிறார். அதற்காக மோடியிடம் உதவியும் கேட்டுள்ளார் டி.கே.சிவகுமார்.

“காஸ்மோஸ்-மைசூரு கோளரங்கத்தை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கர்நாடக மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகப் பிரதமர் இங்கு வந்துள்ளார். எங்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்.
அதேபோல, காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.